உடல்நலம்
ஆவாரம் பூ சட்னி செய்முறை
துவர்ப்பு சுவை கொண்ட அனைத்து பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆவாரம் பூவும் துவர்ப்பு சுவை கொண்டது. ஆவாரம் பூவைப் பற்றி “ஆவாரைக் கண்டார் சாவார் உண்டோ” என்ற பழமொழி கூட உண்டு. ஆவாரம் பூவை பல வழிகளில் நாம் உட்கொள்ளலாம். அவற்றில் ஒன்று ஆவாரம் பூ சட்னி.
தேவையான பொருட்கள்:
- ஆவாரம் பூ – 1 கைப்பிடி
- சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
- தக்காளி – 2
- இந்து உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- ஆவாரம் பூவை நன்கு கழுவி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், ஆவாரம் பூ சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர், தக்காளி சேர்த்து கிளறவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும், இந்து உப்பு சேர்த்து கிளறவும்.
- ஆவாரம் பூ தக்காளி பொரியல் தயார்.