வீட்டிலுள்ள குழந்தைகளும் விரும்பி உண்ணும் சத்தான கம்பு புட்டு: எப்படி செய்வது?
முழு தானியமான கம்பில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல நன்மைகள் நிறைந்துள்ளன. கம்பை வைத்து செய்யப்படும் இந்த சுவையான கம்பு புட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான கம்பு புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு- ½ kg
கருப்பட்டி- ½ kg
தேங்காய் துருவல்- 4 ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் வானலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கழுவி காயவைத்து வைத்துள்ள காம்பை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து அதில் ½ டம்ளர் சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உதிரி உதிரியாக பிணைந்துகொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இட்லி தட்டில் கலந்து வைத்துள்ள கம்பு மாவை சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வேகவைத்த மாவை ஒரு தட்டில் கொட்டி அதில் கருப்பட்டி வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்தால் சுவையான கம்பு புட்டு தயார்.