தித்திப்பான நாவில் வைத்தவுடன் கரையக்கூடிய பழனி பஞ்சாமிர்தம் – எப்படி செய்யலாம்?
பஞ்சாமிர்தம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பழனி முருகன் தான்.
ஆம். உண்மை தான். பழனி முருகனை தரிசிக்காதவர்களும் இல்லை அங்குள்ள பஞ்சாமிர்தத்தை ருசிக்காதவர்களும் இல்லை. இதை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 6
பேரீச்சை – 20
காய்ந்த திராட்சை – கால் கப்
தேன் – 1/2 கப்
நெய் – 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – அரை கப்
பனங்கற்கண்டு – கால் கப்
ஏலக்காய் – 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
இறுதியாக நெய் சேர்த்து மீண்டும் பிநை்துக்கொள்ளவும்.
இவ்வாறு செய்து எடுத்தால் சுவையான மற்றும் முருகனுக்கு படைக்கக்கூடிய பஞ்சாமிர்தம் தயார்.
இதை 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் குளிரூட்டியில் வைத்து சாப்பிடலாம்.