Amla Rice: உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பாக தான் இருக்கும். என்ன தான் செய்தாலும் எடை குறையவே இல்லை என பலரும் வருத்தப்படுவார்கள்.
அந்தவகையில் புளிப்பு சுவைக்கொண்ட நெல்லிக்காயில் பல நன்மைகள் இருகின்றது. அதை வைத்து எப்படி சாதம் செய்து எப்படி உடல் எடையையும் குறைத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வறுத்த வேர்க்கடலை
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை துருவி கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து கலந்து விடவும்.
பின் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
துருவிய நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி!