அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 4 இலட்சம் புதிய நிவாரணப் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்யும் போது சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த முறை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.