ஏனையவை

Instant Dosa Mix: நிமிடத்தில் செய்யலாம் இட்லி, தோசை

பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும். இட்லி, தோசையை ஊற்றி சாப்பிடுவது சுலபம் தான். ஆனால் அதை ஊற்றுவதற்கான மாவு தயார் செய்வது தான் கடினமானதாகும்.

இட்லி, தோசை மாவை அரைக்க முதலில் அரிசியையும், உளுந்தையும் கழுவி பல மணிநேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் அரைத்து எடுத்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். இதனால் விருப்பத்திற்கு கூட விரைவில் தோசை மற்றும் இட்லியை சாப்பிட முடியாமல் இருக்கும்.

எனவே இட்லி, தோசை ரெடி மிக்ஸ் வீட்டிலே எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 4 கப்
உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்.

பின் வெந்தையம் மற்றும் உளுந்தையும் சேர்த்து வறுக்கவும்.

அடுத்து வறுத்து வைத்துள்ள அனைத்தை ஒரு தட்டில் சேர்த்து ஆற வைக்கவும்.
காய்ந்தவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை காற்றுப்புகாத ஒரு போத்தலில் சேர்த்து மூடி வைக்கவும்.

இந்த பொடியை 6 மாதம் வரை குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

இதை வைத்து எப்படி தோசை செய்யலாம்?
தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் பொடியை எடுத்து அதனுடன் 1/4 கப் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்து உப்பும் சேர்த்து, வழமையான தோசை மற்றும் இட்லி ஊற்றுவது போன்று யெ்து எடுக்கலாம்.

Back to top button