ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

அதிஷ்டம் பெறவுள்ள ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.02.2024, சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.34 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 06.04 வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்ல தவறாதீர்கள். உயர் அதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபமடைய மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை விலக்கி இணக்கமான நிலை உருவாக்குவீர்கள். பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க தவறாதீர்கள். விரயச் செலவுகளை குறைப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் பிசினஸில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். காதலுக்கு இருந்த இடையூறுகளை களைவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.

மிதுனம்
மிதுனம்
வியாபாரத்திற்கான உதவிகள் வீடு தேடி வருவதால் சந்தோஷப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். அரசு பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை பார்ப்பீர்கள். கோயில் பிரச்சனைக்காக வாக்குவாதம் செய்வீர்கள். எதிர்பாராத பண வரவால் தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள்.

கடகம்
கடகம்
தொழில் செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் தலை தூக்குவதால் தடுமாற்றம் அடைவீர்கள். இயந்திரங்களில் எச்சரிக்கையாக வேலை செய்யாவிட்டால் ரத்த காயம் படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி தூக்கம் இழப்பீர்கள். மாணவர்களின் கல்விச் செலவு அதிகரித்து பணத்துக்கான நெருக்கடியை சந்திப்பீர்கள்.

சிம்மம்
சிம்மம்
இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவீர்கள். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். அரசாங்க வேலைகளில் தாமதம் அடைவீர்கள்.

கன்னி
கன்னி
நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

துலாம்
துலாம்
ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். புதிய சரக்குகளை இறக்குமதி செய்வீர்கள். பழைய கடன்களை அடைக்க பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோர் பெருமை அடைவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பால் சோர்வு அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்க சிலர் செய்யும் முயற்சியில் மாட்டிக் கொள்வீர்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கத்தை நீக்குவீர்கள். தாயாரின் கால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர் ரகசியம் காக்க பாடுபடுவீர்கள்.

தனுசு
தனுசு
குடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறை அறவே நீங்கி ஆனந்தம் அடைவீர்கள். சக ஊழியர்களின் உதவியால் சாதனை செய்வீர்கள். வெளிநாட்டு நண்பரின் உதவியால் தொழிலை விரிவு படுத்துவீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.

மகரம்
மகரம்
புதிய திட்டங்களால் தொழிலை மேம்படுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகள் உதவியால் சந்தோஷம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகளை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைத்து வித்தியாசமான வியாபாரங்களில் துணிச்சலாக இறங்குவீர்கள். எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.

கும்பம்
கும்பம்
அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை அன்பாக பேசி அகற்றுவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடினமான வேலையை சுலபமாக பார்ப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள்.

மீனம்
மீனம்
மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.

Back to top button