இலங்கை

கொழும்பில் பெண்ணொருவரை கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட பதற்ற நிலை

கொழும்பு, புதுக்கடை பகுதியில் பெண்ணொருவரை கைது செய்ய சிவில் உடையில் சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்த 40க்கும் மேற்பட்ட பொலிஸார் தம்மை தாக்கியதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில், போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணொருவரை கைது செய்வதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்தின் நான்கு அதிகாரிகள் சிவில் உடையில் புதுக்கடை பகுதிக்கு வந்தனர்.

குறித்த பெண் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​இரண்டு இளைஞர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் அதிகாரிகள் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

குறித்த பெண்ணைத் தவிர மேலும் மூன்று பெண்களும் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குழுவினர் கைது செய்யப்பட்ட பின்னர், சிவில் உடையில் 40 பேர் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் லோகட்லேன் தோட்டத்திற்கு வந்து அவர்களை தாக்கி அவர்களது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் மருதானைபொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Back to top button