வீடு சுபிட்சமாக நிலை வாசலில் மாட்ட வேண்டிய படம்
ஒவ்வொரு வீட்டிலும் பிரதான வாசல் என்பது நிலைவாசல் தான்.
இந்த நிலை வாசலை ராஜவாசல் என்று சொல்லுவார்கள்.
இந்த நிலை வாசலானது சரியான முறையில் பராமரிக்கப்பட்டாலே வீட்டில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே நிலை வாசல் பூஜைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.
ஒரு வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று நிலைவாசல் மங்களகரமாகவும், பார்த்தவுடன் நல்ல அதிர்வலைகள் தோன்றும்படியாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் சேர்த்து நாம் செய்யக் கூடிய இந்த ஒரு செயலும் நம் வீடு சுபிட்சமாக மாற வழி புரியும் என்று சொல்லப்படுகிறது.
அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீடு சுபிட்சமாக மாற நிலை வாசலில் செய்ய வேண்டியது ஒவ்வொரு வீட்டில் நிலை வாசலும் சூரிய அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
ஆகையால் தான் மற்ற இடங்களை விட நிலை வாசலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது.
கிரகங்களில் எப்படி சூரியன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ அதை போல தான் இந்த நிலை வாசல் வழிபாடும்.
நிலைவாசல் எப்போதும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மங்களகரமாக இருக்க வேண்டும்.
அதே போல் நிலை வாசலில் விளக்கு வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு நல்ல செல்வ வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதோடு தீய சக்திகள் வீட்டில் அண்டாது காக்கவும் செய்யும்.
நிலை வாசலில் எப்பொழுதும் பைரவர் படம் அல்லது ஒற்றை யானை புகைப்படத்தை மாற்றி வைப்பது மிகவும் நல்லது.
இது வீட்டிற்கு வர இருக்கும் தீய சக்திகள் எதிர்மறை ஆற்றல்களை தடுப்பதுடன் வீட்டில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி செல்வநிலையை உயர்த்திக் கொடுக்கும்.
அதிலும் பைரவர் படம் வீட்டு வாசலில் இருக்கும் போது எந்த வித தீங்கும் நேராமல் நம்மை காப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் நிலை வாசல் வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும் எனில் இந்த நிலை வாசலை தாண்டித் தான் எந்த தெய்வமும் உள்ளே வர வேண்டும்.
நினைவாசலில் நீங்கள் ஏற்றும் தீபம், வழிபாடு இவற்றுடன் எப்போதும் இந்த இரண்டு புகைப்படத்தில் ஏதேனும் ஒன்றை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இது குடும்பம் மேலும் மேலும் செழிக்க நிச்சயம் உதவி புரியும்.
வீடு வளம் பெற செய்யும் இந்த பரிகாரம் முறையில் நம்பிக்கை இருப்பின், நம்பிக்கையுடன் நிலை வாசலில் இதை மாட்டி குடும்பம் சுபிட்சமாக வாழ வழி தேடிக் கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.