ஏனையவை

நீங்க போதுமான அளவு தண்ணீர் பருகாவிடில் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக ஒரு தனிமனிதன், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீரின்றி அமையாது உடல். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு நாம் தெரிந்துக் கொள்வோம்.

உடல் சூடு குறையும்
உடல் சூட்டை சம நிலையில் வைத்திருக்க, தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிப்புறமாக இருந்து மட்டுமல்லாமல், உள்ளூர இருந்தும், உடல் சூட்டை தணிக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. எந்த வகையான காலநிலையாக இருந்தாலும் குறிப்பாக, வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம்.

ஊட்டசத்து கிடைக்கும்
உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த முறையாக தண்ணீர் செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் சிறந்த விநியோகம் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவை போதுமான நீர்ச்சத்தினால் செயல்பட உதவுகின்றன.

உடல் கழிவுகளை நீக்குதல்
குடல் இயக்கத்திற்கு நன்றாக உதவும் செயல்பாடுகளுள் ஒன்று, அதிகம் தண்ணீர் குடிப்பது. உடலில் உள்ள டாக்ஸின் கழிவுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் உள்ள நச்சுகள் மூலம் கழிவுப்பொருட்களாக வெளியேற்ற உதவும். இவற்றை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான தண்ணீரை குடிப்பது, சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான டாக்ஸின்ஸை உருவாக்காமல் தடுக்கிறது.

செரிமானத்திற்கு உதவும்
நாம் சாப்பிடும் உணவு, உணவு செரிமானப் பாதை வழியாக எளிதாக செல்ல நீர் எளிதாக்குகிறது. மேலும் உணவுகளின் மூலம் உருாகும் ஊட்டச்சத்துக்களை உடைத்து, உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இது, வழக்கமான குடல் இயக்கத்தை பராமரித்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது.

அறிவாற்றலுக்கு உதவும்
மனத் தெளிவு மற்றும் சரியான அறிவாற்றல் செயல்பாடு போதுமான நீரேற்றத்தைப் பொறுத்து அமையும். நீர்ச்சத்தினை சரியாக உடலில் வைத்துக்கொள்வதால் நமது மன நிலையும், நினைவாற்றலும் கூட அதிகரிக்கும். இது, கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும்
தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இது, மயக்கம் வருதல், தலை சுற்றுதல் ஆகியவற்றையும் தடுக்கும்.

Back to top button