உடல்நலம்

சளி மற்றும் இருமலுக்கு தீர்வளிக்கும் கமகம தூதுவளை ரசம் 5 நிமிதத்தில் செய்வது எப்படி? A Wonderful Disease-Repelling Rasam

கிராமத்து செய்முறையில்

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம் செய்ய தேவையான பொருட்கள்

தூதுவளை – 1 கப்
பூண்டு – 6 பல்
சின்ன வெங்காயம் – 6
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

தூதுவளை ரசம் செய்யும் முறை

  • ஒரு வாணலியில் நெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்த தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலக்கவும்.
  • மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
  • இலையை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்து எடுத்துக்கொள்ளவும்.
  • தாளிக்க கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்ததை ரசத்தில் சேர்க்கவும்.
  • கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

பயன்கள்:

  • நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
  • ஜீரண சக்தியைத் தூண்டும்.
  • தலையில் உள்ள கபம் குறையும்.
  • காது மந்தம், இருமல், நமைச்சல், பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

குறிப்புகள்:

  • அதிகம் வதக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
  • தேவைப்பட்டால், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கலாம்.
  • மிளகு மற்றும் சீரகம் தயாரிக்க, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.
  • இந்த ரசத்தை சாதத்துடன் சாப்பிடலாம்.
  • மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இந்த தூதுவளை ரசம் சளி, இருமலுக்கு நிவாரணமளிக்கும்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button