இலங்கை

இறக்குமதி செய்யப்பட உள்ள முட்டை

நாட்டில் முட்டை விலை அதிகரித்தமை மற்றும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் நேரடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.

இரண்டு கோடி முட்டைகளை வெளிநாடுகளிலிருந்து அரசாங்கம் நேரடியாக இறக்குமதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், முதற்கட்டமாக 50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு டெண்டர் கோரப்படவுள்ளது.எந்தளவு முட்டைகளை இறக்குமதி செய்வது அதற்காக எவ்வாறான இறக்குமதியாளர்களை தெரிவுசெய்வது போன்ற முக்கியமான தீர்மானங்களை அரசாங்கத்தின் சார்பில் அரச வர்த்தக, வணிக கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும். வெகுவிரைவில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்  கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button