இலங்கை

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் 20 kg அரிசி திட்டம்.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கிணங்க குறைந்த வருமானம் கொண்ட இரண்டு மில்லியன் குடும்பங்களை இலக்காகக் கொண்டு இதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு மேற்படி குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் இந்த செயற்திட்டத்திற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அரசாங்கம் 61,600 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளது.

இந்த செயற்திட்டத்திற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ், அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட உள்ளன.

Back to top button