12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்தது சதோச!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பொருட்களுக்கான விலை அதிகரித்து காணப்படும் நிலையில், 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதோச நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி ,கோதுமை மா 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) 1 கிலோ – 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெத்தலி 1 கிலோ – 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கீரி சம்பா 1 கிலோ – 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 239 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்ந்த மிளகாய் 1 கிலோ – 50 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1730 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.