உணவு

கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் காரக் குழம்பு:சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும்!

சைவ உணவுகளில் மிகவும் சுவையான ஒன்றுதான் கத்தரிக்காய் காரக் குழம்பு. இது உடலுக்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் ஒரு சிறந்த தேர்வாகும். கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீண்ட நேரம் பசியைத் தணிக்கும்.

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)
  • பிஞ்சி கத்தரிக்காய் – 8
  • நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
  • கடுகு
  • வெந்தயம்
  • காஞ்சி மிளகாய்
  • பூண்டு – 20 பல்
  • பெருங்காயப் பொடி – 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்ப் பொடி – தேவையான அளவு
  • தக்காளி – 2 (அரைத்தது)
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • புளித்த தண்ணீர்
  • தண்ணீர் – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் காரக் குழம்பு செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை நான்கு பக்கமாக கீறி பொறித்து எடுத்து வைக்கவும்.
  2. அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், காஞ்சி மிளகாய், பூண்டு போட்டு பூண்டு சிவப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. இதில் மசாலா பொடிகளை (பெருங்காயப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி) சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. இதில் புளித்த தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  7. உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
  8. பொறித்த கத்தரிக்காயை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: இறுதியில் கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

சூடான சாதத்துடன் இந்த கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் காரக் குழம்பை சேர்த்து சாப்பிட்டால், உங்கள் நாக்கில் சுவை வெடிக்கும்!

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button