வேர்க்கடலை கொண்டுள்ள நன்மைகள் சில தெரிந்து கொள்ளுங்கள்!
பல்வேறு நன்மைகள் கொண்ட வேர்க்கடலை பதினாறாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் பரவத்தொடங்கியது .இது பிரேசில் நாட்டில் தோற்றம்பெற்றதாக கருதப்படுகிறது . அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். அப்படியே உலகெங்கும் பரவியது.
காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலையில் உள்ளது.
பொதுவாக மாமிசங்கள், முட்டை, காய்கறிகளைவிட இந்த வேர்க்கடலையில் அதிக புரதச் சத்து கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வேர்க்கடலையை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து சாப்பிடும் போது உடலுக்கு நன்மை அதிகம் எனவும் கூறப்படுகிறது.
வேர்க்கடலையில், புரதச்சத்துகள் மட்டுமின்றி, பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி, மெக்னீசியம் ஆகிய சத்துகளும் உள்ளதாகவும், முக்கிய ஆரோக்கிய தீனியாகவும் இது உள்ளது.
வேர்க்கடலை எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்கும். மேலும் மலச்சிக்கலை போக்கக்கூடியது.
வேர்க்கடலையை வேக வைத்தாலும் வாணலியில் இட்டு வெறுத்தாலும் இனிப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
சீனமக்கள் கடலை எண்ணெயை மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி ஆகியனவற்றுக்கும் தூக்கமின்மைக்கும் பயன் பயன்படுத்துவார்களாம்.
ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது
குறிப்பு: எந்தவொரு மருத்துவத்தினையும் நம்பகமான மருத்துவருடன் கலந்தாலோசித்து எடுத்துக்கொள்வது சிறந்தது.