இலங்கை

தேர்தலை நிறுத்துவது சரியானதே – க. வி. விக்னேஸ்வரன்

நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. எனவே தேர்தலை நிறுத்துவது சரி என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த போட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் இடம் பெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் பரவியிருக் கின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஸ்வரன்,

தேர்தலை நிறுத்துவது சரி என்பது என்னுடைய கருத்து. இந்தத் தேர்தல் தேவையற்றது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது.

இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே ஒவ்வொருவருக்கும் இடையில் முரண்பாடுகளும் தமது பதவி களுக்காகப் பிரிந்துகொண்டு போகின்ற தன்மையும் இந்த நாட்டிலே தற்போது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Back to top button