இலங்கையில் இருந்து தத்தெடுக்கப்பட்ட 11,000 குழந்தைகள் : விசாரணைகளை ஆரம்பிக்க நோர்வே முடிவு
இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழு இலங்கை உட்பட அனைத்து தொடர்புடைய நாடுகளில் இருந்து நிகழ்ந்த தத்தெடுப்புகள் குறித்து ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டச்சு ஆவணப்படம் ஒன்றில், 1980 களில் நாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான இலங்கைக் குழந்தைகள் தத்தெடுப்புகள் நிமித்தம் மோசடியாக விற்கப்பட்டதை இலங்கை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 11,000 குழந்தைகள் வரை ஐரோப்பிய குடும்பங்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இலங்கையில் இருந்து குழந்தையாக தத்தெடுக்கப்பட்ட நோர்வே நாட்டைச் சேர்ந்த பிரியங்கிகா சமந்தி தலைமையிலான ரொமாண்டிசைஸ்ட் இமிக்ரேஷன் அமைப்பு 2021 அக்டோபரில் தத்தெடுப்பு குறித்த விசாரணையை கோரியிருந்தது.
இந்த சுயாதீன விசாரணைக் குழுவிற்குத் தேவையான நிபுணத்துவம் இருக்க வேண்டும் என அமைப்பின் பொது முகாமையாளர் சமந்தி வலியுறுத்தியிருந்தார்.