தினமும் இளநீர் குடிப்பீங்களா?
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை பானங்கள் என்றதும் அனைவரது நினைவிலும் முதலில் வருவது இளநீராகத் தான் இருக்கும். முக்கியமாக இயற்கை பானங்களிலேயே இளநீரில் தான் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது.
என்ன தான் இளநீர் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அந்த இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் அதுவும் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு இளநீருக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
கலோரிகள் அதிகம் இளநீரில் கலோரிகள் அதிகளவில் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. என்ன தான் இளநீரில் மற்ற பழச்சாறுகள் மற்றும் பிற பானங்களை விட சர்க்கரை குறைவாக இருந்தாலும், இவற்றில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. எனவே நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், அதிகமாக இளநீரைக் குடிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் .
8-வது மகளிர் டி20 உலக கோப்பை – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி.