இலங்கை
இலங்கையில் கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
0112 101 500 , 0112 101 600 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு மக்கள் தமது உதவிகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்
போதியளவு குறுந்தகவல்கள் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.காலை 8.00 மணி முதல் மாலை 4.45 வரை இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.