இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தில் அடுத்த திங்கட்கிழமை முதல்,அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த தினத்தில் காலை 8 மணிமுதல், மேல், மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. அதேநேரம், எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல், வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. 15ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளீர்க்கும் வகையில், பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Back to top button