இலங்கை
நாளை தேசிய சட்ட மாநாடு ஆரம்பம்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய சட்ட மாநாடு நாளை ஆரம்பமாகிறது. ‘நெருக்கடியின் ஊடாக வழிசெலுத்தல் – சட்டத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இதன் பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவும் கௌரவ அதிதியாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாடு பல அமர்வுகளாக பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ளது. அவை ஒவ்வொன்றின் போதும் நெருக்கடியின் ஊடாக வழிநடத்துதல் மற்றும் அதில் சட்டத்தின் பங்கு என்பன குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.