இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரிய சங்கமும் இணைவு!

நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழில் வல்லுநர்களின் தொழிசங்க கூட்டமைப்பு உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மூன்றில் ஒரு கட்டம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இதில் நீர்வழங்கல், மின்சார விநியோகம், வைத்திய துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Back to top button