யாழில் பகிடிவதை காரணமாக பல்கலைகழக மாணவன் தற்கொலை முயற்சி!
சிரேஸ்ட மாணவர்களது பகிடிவதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலை கழக மாணவன் ஒருவர் காப்பாற்றப்படுள்ளார்..
23 வயதான கோப்பாய் பகுதிய சேர்ந்த வறுமைக்கோட்டின்கீழ் மொரட்டுவ பல்கலைகழக மாணவனே இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
சிரேஸ்ட மாணவர்கள் தினமும் தங்களுக்கு மரியாதை தருவேன் என்று 1000 முறை எழுத வேண்டும் என்றும் தங்களுடன் தினமும் போனில் கதைக்கவேண்டும் என்றும் வலுக்கட்டாயமாக பணித்துள்ளார்கள்..
இதற்கிடையில் அம்மாணவன் பல்கலைக்கழகம் செல்லமாட்டேன் என்று வீட்டாரிடம் சொல்லியுள்ளார்.. இருந்தும் அவரின் பெற்றோர்கள் அம்மாணவனை கவனிக்கவில்லை..
யாருடைய உதவியும் இல்லாத நிலையில் அம்மாணவன் பல்கலைகழக மாணவர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அம்மாணவன் வீட்டை விட்டு சென்று இரண்டு நாட்கள் காங்கேசன் துறை கடற்கரையிலும் பின்னர் தெல்லிப்பழையில் பாழடைந்த வீட்டிலும் தனியாக தங்கியிருந்தார்..
இதை அவதானித்த சிலர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஏற்கனவே காணாமல் போனவர் என்று பெற்றோரின் முறைப்பாட்டில் பொலிசார் அவரை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டார்.. மாணவனின் கழுத்திலும் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.. இந்நிலையில் விரக்தியில் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்… மருத்துவ பரிசோதனையிலும் தற்கொலை முயற்சி என்று கண்டறியப்பட்டுள்ளது..