வலுவடையும் ரூபாவின் பெறுமதி- ஒரு செயற்கையான நிலைமை!
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை.
தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளித்து, மக்களை ஏமாற்றுவதற்காக ரூபா மதிப்பு உயர்ந்துவிட்டது என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது.
இந்தநிலையில், முடிவெடுப்பதில் மத்திய வங்கி தற்போது சுயாதீனமாக செயற்படவில்லை. அது முழுப் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே மத்திய வங்கி நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.