இலங்கை
இறக்குமதி முட்டைக்கான வரி குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒரு கிலோகிராமிற்கான வரி நேற்றிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆயிரத்து 300 ரூபாவாக இருந்த முட்டைக்கான வரி 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ, குறித்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.