இலங்கை
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று தீர்மானம்
அரசாங்கத்தின் வரி கொள்ளைக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தொழிற்சங்கவியலாளர்களின் தொழிற்சங்க ஒன்றியம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. இதேவேளை ஜனாதிபதியுடன் நடத்த திட்டமிட்டிருந்த கலந்துரையாடல் தொடர்பில் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம இன்று 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது. வரி கொள்ளை தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை கைவிட போவதில்லை என பல்லைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.