இலங்கை
‘ஹரக் கட்டா’ பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்!
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டிய சந்தேகநபர், அதன் மூலம் தனது பாதுகாப்பை உறுதி செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். குற்றப்புல திணைக்கள விசாரணை அதிகாரிகள், காவல்துறைமா அதிபர் மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு நதுன் சிந்தகவின் சட்டத்தரணிகளால் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது