இலங்கை

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலக்கரி விலை குறைவடைதல், எரிபொருள் விலை குறைவடைதல் மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனால் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ பதில்கள் எதனையும் இதுவரையில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button