ஏப்ரல் 14 ; தமிழ் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகம்தான்!
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றங்களின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 12 மாதங்களுக்கு பின் சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். சூரியன் மேஷ ராசிக்கு செல்லும் போது தான் சித்திரை மாதம் பிறக்கிறது மற்றும் தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடமும் பிறக்கிறது.
அந்தவகையில் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் சூரியன் ஒரு மாத காலம் இருப்பார். மேஷ ராசியானது சூரியனின் உச்ச ராசியாகும். இந்த மேஷ ராசியில் மே 15 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்வார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்தவகையில் 12 ராசிகளுக்குமான சித்திரை மாத ராசி பலன்கள்,
நற்பலன்களை அடையபோகும் ராசியினர் யார்?
மேஷம்: மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இக்காலத்தில் வலுவாக இருப்பீர்கள்.
ரிஷபம்: ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள், இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயங்களைப் பெறக்கூடும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பண ஆதாயங்களைப் பெறுவார்கள். இதனால் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் எதிரிகளை விட சிறப்பாக செயல்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்புறவு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
கடகம்: கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் அல்லது அரசு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
சிம்மம்: சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் ஆலோசனைகளைப் பெற விரும்புவார்கள். தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியான நற்பலனைப் பெறுவார்கள். வருமானம் உயர வாய்ப்புள்ளது.
கன்னி: கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதோடு, தொழில் ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சில சவால்களை சந்தித்தாலும், வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். முன்பு செய்த முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். திடீர் பண வரவிற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் கசப்பு ஏற்படவிடாதீர்கள். இக்காலத்தில் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான பணிகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்து, இதுவரை பல தடைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அதில் வெற்றி காண்பீர்கள். உங்களின் எதிரிகளை இக்காலத்தில் தோற்கடிப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களை வீழ்த்த நினைத்தவர்கள், இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு: தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆக்கப்பூர்வமான பணிகளில் நல்ல வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் தேர்வுகயில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சியை எக்க வேண்டும். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்களின் முடிவுகள் இக்காலத்தில் நல்ல பாராட்டைப் பெறும். என்ன தான் வெற்றிகளை கண்டாலும், சில மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும்.
மகரம்: மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல வெற்றி கிடைத்தாலும், மன உளைச்சலை சந்திக்க நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் உடைமைகளில் கவனமாக இருங்கள். வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியன் நற்பலன்களை வாரி வழங்குவார். இருப்பினும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டைப் பெறும். அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய நினைத்தவர்களின் ஆசைகள் நனவாகும்.
மீனம்: மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் கண் பிரச்சனைகளை சந்திக்கலாம். நிலுவையில் இருந்த பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு காரணத்தால் குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்கப்படலாம். ஆனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட விட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால், குடும்பத்தில் மீண்டும் இணைக்க முடியாது. உங்கள் பேச்சை இக்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை இக்காலத்தில் எந்த ஒரு விஷயத்திற்கும் கருத்து சொல்ல முயல வேண்டாம்.