இலங்கை
மத்திய வங்கிக்கு விசாரணைகளுக்காக விரைந்தது காவல்துறை!
காணாமல்போனதாக கூறப்படும், 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு – கோட்டை காவல்துறையினர், இன்று காலை மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர். இதன்போது, சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, எமது செய்திச் சேவை வினவியபோது, கோட்டை காவல்துறை தெரிவித்தது. இலங்கை மத்திய வங்கியின் பண வைப்பகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதாக, கொழும்பு – கோட்டை காவல்துறையில், மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று முறைப்பாடு செய்தனர். மத்திய வங்கியின் பண வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த, 50 இலட்சம் ரூபா பணக் கட்டே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.