இலங்கை
மீன்களை உண்ண வேண்டாம்; எச்சரிக்கும் சுகாதார சேவை
அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் பாயும் கொத்மலை ஓயா பிரதேசத்தில் வசிப்பவர்களை இந்த ஆற்றுப் பகுதிகளில் இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் நேற்று (16) முதல் திடீரென மீன்கள் இறந்து வருவதாக நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அம்பேவல தொடக்கம் மெரயா, அல்ஜின் அக்கரகந்த வரையான சுமார் 12 கிலோ மீற்றர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும் இறந்த மீன்களை எடுத்துச் செல்வதால் இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.