இலங்கை

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

நான்கு துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 17, 2023 அன்று முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானி அறிவிப்பின் படி, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Back to top button