இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.

கொவிட்டின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது.அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்கவேண்டாம் என்று கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. .யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கொவிட் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா வைத்தியசாலையால் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொவிட் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்கவேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரால் சூம் செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களில் கொவிட் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வேறு நோய்கள் இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அமைச்சு வாய்மொழி மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

Back to top button