இலங்கை
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை! வெளியானது விசேட வர்த்தமானி
இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார்.
பொது மக்களின் அமைதியைப் பேணல்
பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் இன்று (22.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டளை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.