இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஆரம்பிக்கும் நடிகர் சிவாஜி மகன்!

யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஃபிலிம் சிற்றி ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக கலைகலாச்சாரம், பொருளாதார ரீதியிலான அபிவிருத்திகள் தொடர்பில் யாழில் உள்ள பல நண்பர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த ராம் குமார், தனது தந்தையின் வழிமுறைகளை பின்பற்றி இவ்வாறான பல முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் மிகமுக்கியமாக யாழ் மாவட்டம் முன்னேற்றம் அடைவேண்டிய இடமாக காணப்படுவதாகவும் எதிர்வரும் 5 வருடங்களில் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் முன்னேற்றத்தை அவதானிக்க முடியும் என்றும் சிவாஜி மகன் ராம்குமார் மேலும் கூறினார்.

Back to top button