இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8 சதவீதமாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதுடன், மணித்தியாலத்திற்கு 45.2 ஜிகாவாட்களை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3 சதவீதம் மற்றும் 15 சதவீதம் கொள்ளளவாகவும் உள்ளது. இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34 சதவீதமாகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84 சதவீதமாகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் மொத்த மின் உற்பத்தியில் 14 சதவீதம் மாத்திரமே நீர்மின் நிலையங்கள் மூலமாகவும், 72.5 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்தும் கிடைகின்றன.