இலங்கை

வெப்பமான காலநிலை குறித்து வெளியான அறிவித்தல்!

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை, அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம், இரத்தினபுரி மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது. அதேநேரம் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்தும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் வெப்ப சூழ்நிலையில் தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Back to top button