இலங்கை

காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மானவன் இன்றைய தினம் (24-04-2023) இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

மேலும், வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார்

மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button