இலங்கை

இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 2% சுருங்கும்: மத்திய வங்கி

2023ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2வீதத்தினால் சுருங்கும் என மத்தியவங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று (27.04.2023) தமது வருடாந்த அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.3வீதத்தினால் வளர்ச்சியடையும் என மத்திய வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம்

2022 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 7.8வீதத்தால் சுருங்கியது, ஆழமான அரசியல் ஸ்திரமின்மை, உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் செங்குத்தான நாணயத் தேய்மானம் என்பனவே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Back to top button