இலங்கை
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு!
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் வெள்ளை சீனி மெட்ரிக் டொன் ஒன்றின் விலை 500 அமெரிக்க டொலர்களில் இருந்து 750 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இலங்கையிலும் சீனி விலை அதிகரித்துள்ளதென்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.