8 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியம்!
08ஆம் எண்காரர்கள் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்கள், நியாயம் மற்றும் அநியாயத்தை யாராக இருந்தாலும் தெளிவாக எடுத்துரைத்து விடுவார்கள். எந்த ஒரு செயலையும் பரபரப்பாகவோ அவசரமாகவோ செய்ய மாட்டார்கள். எதையும் நன்றாக ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள். எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்துவார்கள். செல்லும் இடத்துக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த எண்காரர்கள், நிம்மதியைத் தேடி அலைவார்கள். எதையாவதொன்றை நினைத்து தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். பாதிக்கப்பட்ட யாரையாவது கண்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். சேமிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கும். இவர்களுக்கு எப்போது கோபம் வருமென்று யாருக்கும் தெரியாது. மற்றவர்களை சரியாக எடைபோடக் கூடியவர்கள். சிரித்து பேசும் சுபாவம் உள்ள இவர்கள், மற்றவர்களையும் சிரிக்க வைப்பார்கள்.
தொழில் இரும்பு வியாபாரம்,விவசாயம், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற தொழில்கள் இந்த எண்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். மரம், விறகு உதிரி பாகங்கள் விற்பனை செய்தல், பிராணிகள் வளர்ப்பு, வாகன ஓட்டுநர் போன்ற தொழில்களும் இந்த எண்காரர்களுக்கு ஏற்றது.
திருமணம் பெண்கள் நல்ல அழகுடன் இருப்பார்கள். காதல் விஷயங்களில் ஏமாறலாம். தம்பதியர் தான, தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். அமையும் மனைவி சிக்கனமானவராகவும் எதிர்த்துப் பேசாத குணம் கொண்டவராகவும் இருப்பர்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், நீலம், கரும் பச்சை போன்ற நிறங்கள் அதிர்ஷ்டமானவை. கருப்பு, கரும் சிவப்பு என்பவற்றை தவிர்க்க வேண்டும்.