இலங்கை

யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்துரொட்டி தயாரித்த உணவகத்துக்கு சீல்!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்த இறைச்சி, கொத்துரொட்டிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் கடைக்கு மறு அறிவித்தல் வரை சீல்வைக்குமாறு மேலதிக நீதவான் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நேற்று (11.05.2023) குறித்த கடையில் திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (12.05.2023) துசுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் “B” பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடி சீல்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (11.05.2023) மேற்கோள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த சமைக்காத கோழி இறைச்சிகள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ கிராம் இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதுடன் மேலும் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைய இனங்காணப்பட்ட 45 கிலோ கிராம் இறைச்சியினை அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கினை யூன் மாதம் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button