புதனால் அதிர்ஷ்டத்தை அடையப் போகும் ராசிகள்!
2023 மே 15 ஆம் தேதி புதன் பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில் கிரகங்களால் கிடைக்கும் நற்பலன்கள் மெதுவாக இருக்கும். மே 15 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் பின்வரும் 3 ராசிக்காரர்கள் புதன் வக்ர நிவர்த்தியால் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர்.
மிதுனம் – 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக உங்களின் முக்கிய வேலை தடைபட்டிருந்தால், இனிமேல் அது முடிக்கப்படும். வழக்கத்தை விட நம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் நிறைய பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம் – சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக் நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில பண வரவுகளைப் பெறலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.
மீனம் – மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நிதி ரீதியாக இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு, இக்காலம் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும் காலமாக இருக்கும். ஆனால் ஏழரை சனி நடப்பதால், சனியின் தாக்கத்தைக் குறைக்க, சனி பகவானை மறவாமல் வழிபட வேண்டும்.