ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை வகுக்குமாறு சட்டத்துறைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சமுகத்திலுள்ள சில ஆசிரியர்கள் வயது வந்தவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவில் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்ட கட்டமைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டம் கட்டாயம் திருத்தப்பட வேண்டும். புதிய சட்டங்களை வகுக்கும் போது கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த சட்டம் வகுக்கப்பட்டதன் பின்னர் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். பாடசாலை பாடவிதானங்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட மனநல சுகாதாரம் குறித்தும் புதிய கருத்தாடல் ஒன்றும் விளக்கமளிப்பு வேலைத்திட்டம் ஒன்றும் அவசியம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.