இலங்கை

இந்த ராசிக்காரர்களிடத்தில் பணமே இலகுவில் தங்காதாம்!

ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். கீழ்வரும் ராசிக்காரர்களே செலவாழிகளாக இருப்பார்கள்.

சிம்ம ராசி

இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் ஆகும். மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் அதிக செல்வாளிகலாகவோஇருப்பார்கள்.

துலாம் ராசி

இது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும் ஆகும். இதன் அதிபதி சுக்கிரன். சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு ஆகும். மிகவும் உயரிய பொழுது போக்கினை கொண்டுள்ளார்கள். இவர்கள் தனக்காக மட்டுமல்லாது தனது நண்பர்களுக்காகவும் செலவு செய்வார்கள்.

விருச்சிக ராசி

இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும் ஆகும். இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்களாகவும் யாரை பற்றியும் கவலைப்படாது தனக்கு பிடித்ததை செய்து மகிழ்பவர்களாகையால் அதிக செலவு செய்வார்கள்.

கும்ப ராசி

இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் ஆகும். இது ஒரு காற்று ராசி. இதற்கும் அதிபதி சனிதான். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. இவர்கள் சமுதாயத்தில் பெருமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை விரயமாக்குவார்கள்.

Back to top button