ஆன்மிகம்

ஆபத்துக்கள் வருவதைத் தடுக்க இந்தப் பரிகாரம் செய்தாலே போதும்!

நாம் தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், கண் திருஷ்டிகள், கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், எதிர்மறை ஆற்றல்கள் இவை அனைத்தையுமே நாம் ஆபத்துகள் என்று பொதுவாக கூறுகிறோம். அப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து நம் வீட்டையும், தொழில் ஸ்தாபனத்தையும் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வீட்டிற்கு வரக்கூடிய ஆபத்துகளையும், நம் தொழில் ஸ்தாபனத்துக்கு வரக்கூடிய ஆபத்துகளையும் நம்மால் முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலாத பட்சத்தில் வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க வருவதற்கு முன்பாகவே எவ்வாறு தடுக்கலாம் என்பதை எல்லாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் மூலஸ்தானத்திற்கு முன்பாக துவார பாலகர்கள் என்று இரண்டு பேர் இருப்பார்கள். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகுதான் தெய்வத்தை நம்மால் தரிசிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தீய எண்ணத்துடன் வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படி இரண்டு துவார பாலகர்கள் எப்போதும் நம் வீட்டு வாசலில் நின்று நம் குடும்பத்தையும் நம் தொழில் செய்யும் இடத்தையும் பாதுகாக்க போறாங்க. மகிழ்ச்சியோடு இருக்கும் வீடுகளில் திடீரென்று பிரச்சனைகள் உருவாகி அதனால் மன கவலையும், நிம்மதி அற்று வாழும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

அதேபோல் தொழிலில் நல்ல லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று நஷ்டத்தில் செல்வதும், கடன் தொகை அதிகரிப்பதும் தீய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதற்குரிய அறிகுறிகளாக கருதப்படுகிறது. இப்படியாக நமக்கும், நமக்கு வருமானம் தரக்கூடிய தொழிலுக்கும், நம் கண்ணிற்கு தெரிந்து வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆனால் நம் கண்ணிற்கு தெரியாமல் வரும் எதிர்மறை சக்திகளால் வரும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக தான் இந்த எளிய பரிகார முறை –

இந்த பரிகார முறையை நாம் செய்வதற்கு நமக்கு தேவையான பொருட்கள் சிறிது பச்சரிசியும் மஞ்சள் தூளும். இவை இரண்டையும் கலந்து அச்சதையாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அட்சதையை காலையில் எழுந்து வாசலின் இரு பக்கங்களிலும் “ஓம் பைரவாய நமஹ” என்று கூறியவாறு வைக்க வேண்டும்.

சிறிதளவு வைத்தாலே போதுமானது. வைணவத்தை கடைபிடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் “ஓம் நரசிம்மாய நமஹ” என்று கூறியபடி இரண்டு புறமும் வைக்க வேண்டும். இதே போல் தான் தொழில் ஸ்தாபனத்திலும் செய்ய வேண்டும். இந்த எளிமையான பரிகாரத்தை நாமும் நம் வீடுகளிலும், தொழில் ஸ்தாபனத்திலும் மேற்கொண்டு வரக்கூடிய அனைத்து ஆபத்துகளில் இருந்தும் நம்மை காத்துக் கொள்வோம்.

Back to top button