உடல்நலம்

காலை உணவாக இட்லி சாம்பார் உண்பதால் இத்தனை நன்மைகளா?

பெரும்பாலானவர்களின் காலை உணவு என்றால் அது இட்லி தான், மிருதுவான இட்லிக்கு சுடச்சுட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்றாலே அலாதி பிரியம். ஆறு மாத குழந்தை முதல் அறுபது வயது முதியவர்கள் வரை எளிதில் செரிக்கக்கூடிய உணவும் இட்லியே. உடல்நலக்குறைபாடு என்றாலும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியை தான். இந்த பதிவில் இட்லி சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏன் இட்லி சாப்பிட வேண்டும்?

அரிசி, உளுந்து என கலவையாக தயாராகும் இட்லியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. மாவும் புளிக்கவைக்கப்படுவதால் செரிமானத்துக்கு தேவையான என்சைம்கள் இருக்கின்றன, இவை நம் உடலில் எளிதில் ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதற்கு உதவிபுரிகிறது.

காலை உணவாக சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் புரதம் எளிதில் கிடைத்து விடும், சாம்பாரில் உள்ள காய்கறிகளில் நார்ச்சத்துகளும், உடலுக்கு தேவையான சத்துக்களும் நிறைந்திருக்கிறது.

மிக முக்கியமாக ஆவியில் வேக வைக்கப்படும் உணவு என்பதால் டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையை குறைக்கபாடுபடும் நபர்களும் எடுத்துக் கொள்ளலாம். இட்லி போன்ற புளிக்கவைக்கப்பட்ட மாவில் தயாராகும் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதுடன் கொழுப்பையும் குறைக்கிறது.

Back to top button