லண்டன்

பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் உடனான திருமண உறவில் நீடிக்க இது தான் காரணம் -அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரித்தானிய நாட்டின் இளவரசர் ஹரி , மேகன் உடனான திருமண உறவில் நீடிப்பதற்கான காரணம் இது தான், என அரச குடும்பத்தின் முன்னாள் சேவகர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்லே உடனான, திருமண உறவை தொடர்வதற்கு காரணம் அவர்களது குழந்தைகள் தான், என ராணி டயானாவின் முன்னாள் சேகவர் பால் புர்ரெல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது குழந்தைகளை அளவுக்கு அதிகமாக நேசிப்பதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிக்கல் வந்துவிட கூடாது என்பதாலும், ஹரி மேகனோடு வாழ்ந்து வருவதாக பால் புர்ரெல் தெரிவித்துள்ளார்.

மேலும், ’மேகன் அழகால் அவரை மயக்கி மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதை, ஹரி உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன், இது பற்றி நான் மட்டும் அல்ல, பிரித்தானிய குடிமக்கள் ஒவ்வொருவரும் நினைத்திருப்பீர்’ என புர்ரெல் GB செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.மேகன் உடனான திருமண உறவை ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்@getty images

அத்துடன் தனக்கு ஹரியை தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், அவர் எப்போதும் தன் குழந்தைகளுக்கு, நல்ல தந்தையாக இருக்க விரும்புவார் எனவும், அவர் தனது மனைவி உடனான உறவை முறித்து கொண்டால், மேகன் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று விடுவார் என்பதாலும், ஹரி திருமண உறவை தொடர்ந்து வருவதாக புர்ரெல் கூறுகிறார்.இதனிடையே மன்னர் சார்லஸின் சேவகர் கிராண்ட் ஹர்ரொல்ட், ஹரி சீக்கிரமே பிரித்தானியாவில் சில சொத்துக்களை வாங்கி இங்கு குடி பெயர்ந்து விடுவார், என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ’ஹரி மேகன் உடனான உறவை முறித்து கொண்டு, அவர் மீண்டும் பிரித்தானியாவிற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி அவர் வந்தால் அவரை மன்னரும், அரச குடும்பமும் அன்போடு அரவணைத்துக் கொள்ளும்’ என புர்ரெல் கூறியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளோடு கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

பிரித்தானிய மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட இளவரசர் ஹரி நிகழ்வு முடிந்த அன்றே அமெரிக்காவிற்கு திரும்பி விட்டார். அதே நாளில் ஹரியின் மகன் அர்சிஸின் பிறந்த நாள் இருந்ததால், அவர் அமெரிக்கா சென்றார் என அரச குடும்ப ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Back to top button