நடுவானில் 324 பயணிளுடன் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு!
நேற்று, ஜப்பானின் ஒசாகாவிலிருந்து பாரிஸ் நோக்கி சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் நடுவானில் பழுதடைந்ததால் புறப்பட்டஇடத்துக்கே திரும்பியது. ஞாயிற்றுக்கிழமை, மேற்கு ஜப்பானில் உள்ள ஒசாகாவிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு பறந்த ஏர் பிரான்ஸ் KLM SA பயணிகள் விமானம் பசிபிக் பெருங்கடலில் பறக்கும்போது வானிலை ரேடார் மற்றும் வேக மீட்டர் செயலிழந்தது. இதனால் உடனடியாக விமானம் ஒசாகா விமான நிலையத்திற்கே பத்திரமாக திரும்பிச் சென்றது. விமானத்திலிருந்த 324 பயணிகள் மற்றும் பணியாளர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், விமானத்தின் முன்னணி விளிம்பு சேதமடைந்துள்ளது, அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து அமைச்சகத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏர் பிரான்ஸ் விமானம் 291 கன்சாய் விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11:15 மணியளவில் (0215 GMT) புறப்பட்டது. சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி மதியம் 2:25 மணியளவில் அதே விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.